தமிழகம்

சசிகலாவிடம் போனில் பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

செய்திப்பிரிவு

சசிகலாவிடம் மொபைல் போனில் பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வின்சென்ட் ராஜாவின் காரை பார்வையிட்டு விசாரணை நடத்திய போலீஸார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்தவர் வின்சென்ட் ராஜா. இவர் பரமக்குடி அருகே மேலக்காவனூர் கிராமத்தில் தார் பிளாண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் சசிகலாவிடம் மொபைல் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் வின்சென்ட் ராஜா நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தார் பிளாண்ட் நிறுவனத்தில் காரை நிறுத்திவிட்டு வின்சென்ட் ராஜா தூங்கச் சென்றார். அதிகாலை 2.45 மணி அளவில் பெரிய சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார் கொளுந்துவிட்டு எரிந்தது. மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி காருக்கு தீவைத்து தப்பிவிட்டனர்.இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இது குறித்து குற்றப்பிரிவு டிஎஸ்பி திருமலை, இன்ஸ் பெக்டர் அமுதா உள்ளிட்ட பரமக்குடி தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும் அங்கி ருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவைத்த நபர் களை போலீஸார் தேடி வரு கின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் தூண்டுதல்

இதுகுறித்து வின்சென்ட் ராஜா கூறும்போது, `சசிகலாவிடம் போனில் பேசிய பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். எனது காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதை செய்துள்ளனர். முன்னாள் அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி இருவரும் உறவினர்கள். இவர்களைத் தவிர வேறு யாருடைய தூண்டுதல் இன்றியும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருக்க முடியாது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது' என்றார்.

SCROLL FOR NEXT