தமிழகம்

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு முழு தோல்வி: மு.க.ஸ்டாலின் கருத்து

செய்திப்பிரிவு

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு முழு தோல்வி அடைந்துவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பெரம்பூர் தீட்டி தோட்டம், திருவிக நகர் ஜானகி ராமன் நகர், ராம்நகர், பெரவள்ளூர் ஜி.கே.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் பேருக்கு திமுக சார்பில் நேற்று அரிசி, வேட்டி, சேலை, போர்வை போன்ற பொருட் களை ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் நிவாரணப் பணி களை மேற்கொள்வதில் தமிழக அரசு முழு தோல்வி அடைந்துள் ளது. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் முழு உண்மைகளை மறைக்கும் வகையில் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளி யிட்டுள்ளார். முதல்வரின் தவறு களை மறைக்க தலைமைச் செயலாளர் துணை போகிறார்.

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு திமுகவினர் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் வரவில்லை. எனவே, இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.

மதிமுகவில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் திமுக மேலும் பலமாகி வருகிறது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT