தமிழகம்

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு 23 நிபந்தனைகள்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

செய்திப்பிரிவு

கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியைக் காண வருவோருக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும், பெண்கள், குழந்தைகளுக்கு தனியிட வசதி உள்பட 23 நிபந்த னைகள் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், டி.பன்னப்பட்டி ஆதிபகவதியம் மன் கோயிலில் ஜூலை 10-ம் தேதி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்குடி பெரிய நாயகி அம்மன் கோயில் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட் டங்கள் உள்பட பல்வேறு ஊர்களிலி ருந்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தை யும் விசாரித்து நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவு:

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு 23 நிபந்தனைகளின்பேரில் அனுமதி வழங்கப்படுகிறது. அதன் படி ஆடல், பாடல் நிகழ்ச்சியை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு முடிக்க வேண் டும், நடனமாடுபவர்கள் ஆபாச மாக உடைகள் அணியக்கூடாது, அநாகரீகமாக நடனம் ஆடக் கூடாது, ஒரு குறிப்பிட்ட தலை வர், மதம் மற்றும் ஜாதியைப் பற்றி பேசவோ, பாடவோ, ஆடவோ கூடாது, நடன நிகழ்ச்சி யில் இடம்பெறும் பாடல்கள், உரையாடல்கள், ஆடல்கள் விவரம், நடன நிகழ்ச்சி நடத் தும் கலைக் குழுவினர், அதில் நடன மாடுபவர்களின் பெயர் விவரங் களை உள்ளூர் காவல் நிலைய அதிகாரியிடம் நிகழ்ச்சி தொடங் கும் 12 மணி நேரத்துக்கு முன் வழங்க வேண்டும்.

நிகழ்ச்சி நடைபெறும் மேடை யின் உறுதித்தன்மை குறித்த பொறி யாளர் சான்று, முறைப்படி மின் சாரம் பெறப்படுகிறது என மின் வாரிய அதிகாரியிடம் சான்று, நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் தனி யாரின் சம்மதக் கடிதம் ஆகியவற் றையும் போலீஸாரிடம் வழங்க வேண்டும்.

நிகழ்ச்சியில் பெட்டி வடிவ ஒலி பெருக்கியைப் பயன்படுத்த வேண் டும், நிகழ்ச்சிக்கு வருவோரது வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்க வேண்டும், நிகழ்ச்சியை பார்வையிட வரும் குழந்தைகள், பெண்களுக்கு தனிப்பகுதி ஒதுக் கப்பட வேண்டும், குடிநீர், கழிப் பறை வசதி செய்துதர வேண்டும்.

நிகழ்ச்சியில் பிரச்சினை ஏற் பட்டால் விழாக் குழுவினர் பொறுப்பேற்க வேண்டும் நிபந்த னைகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்தவும், விழாக்குழுவினர் மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், தவிர்க்க முடியாத சூழலில் நிகழ்ச்சியை போலீஸார் நிறுத்தச் சொன்னால், அதையேற்று நிகழ்ச்சியை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT