தமிழகம்

பேரிடர் மீட்புப் பணியை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பத்துடன் மீட்புக் குழு: தென்னிந்திய மீனவர் பேரவை தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னையில் சமீபத்தில் மழை கொட்டித் தீர்த்ததைப் போன்ற நிகழ்வு எதிர்காலத்தில் ஏற்பட் டால், அதிநவீன தொழில்நுட்பத் துடன் மீட்புப் பணியை மேற் கொள்வதற்காக தமிழ்நாடு மீனவர் பேரிடர் மீட்புக் குழு என்ற புதிய அமைப்பை தென்னிந்திய மீனவர் பேரவை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய மீனவர் பேரவைத் தலைவரும் முன்னாள் கப்பல் பொறியாளரு மான ஜெயபாலையன் கூறிய தாவது:-

மீட்புப் பணிக்கு இளைஞர்கள் அவசியம் என்பதால் 20 வயது முதல் 30 வயது உடையவர்கள் மட்டும் இக்குழுவில் சேர்க்கப்படுகின்றனர்.

10 ஆயிரம் பேர்

முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் 150 பேரைச் சேர்த்துள்ளோம். மொத்தம் 10 ஆயிரம் பேரைச் சேர்க்கவுள்ளோம்.

கப்பல் பொறியாளரான நான், கப்பலில் 11 ஆண்டுகள் பணியாற்றி யுள்ளேன். அப்போது மீட்புப் பணியில் எனக்கு கிடைத்த அனு பவத்தையும், தற்போதைய நவீன தொழில்நுட்பத்தையும் சேர்த்து பயிற்சி அளிக்கப்படும். மேலும், அமெரிக்கா, சுவீடன் போன்ற நாடுகளில் உள்ள நண்பர்கள் நவீன மீட்புப் பணிக்கான சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கு வதாக உறுதி அளித்துள்ளனர்.

பல்வேறு பயிற்சிகள்

எனவே, மழை வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் மட்டுமில்லாமல், தீ விபத்து போன்ற அவசர காலத்தில் அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்தும் எங்கள் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு ஜெய பாலையன் கூறினார்.

SCROLL FOR NEXT