தமிழகம்

கோவை - நாகர்கோவில், மேட்டுப்பாளையம் - சென்னை ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கம்

க.சக்திவேல்

கோவை - நாகர்கோவில், மேட்டுப்பாளையம் - சென்னை இடையேயான சிறப்பு ரயில்கள் நாளை (ஜூன் 20) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பல சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இதில், தேவை கருதி முக்கிய ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:02695) 20-ம் தேதி முதலும், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:02696) வரும் 21-ம் தேதி முதலும் இயக்கப்படும். அதேபோல, சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:02639) 20-ம் தேதி முதலும், ஆலப்புழா-சென்னை சென்ட்ரல் இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:02640) வரும் 21-ம் தேதி முதலும் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:02671) 20-ம் தேதி முதலும், மேட்டுப்பாளையம்-சென்னை சென்ட்ரல் இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:02672) வரும் 21-ம் தேதி முதலும் இயக்கப்படும். மேலும், கோவை-நாகர்கோவில் இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:02668) 20-ம் தேதி முதலும், நாகர்கோவில்-கோவை இடையேயான தினசரி சிறப்பு ரயில் (எண்:02667) வரும் 21-ம் தேதி முதலும் இயக்கப்படும”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT