சாமி ரவி 
தமிழகம்

அதிமுகவினரிடம் ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கு: ரவுடி சாமி ரவியிடமிருந்து ரூ.1.65 கோடி பறிமுதல்

செய்திப்பிரிவு

திருச்சி அருகே அதிமுகவினரின் காரிலிருந்து ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சாமி ரவியிடமிருந்து ரூ.1.65 கோடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் பேட்டை வாய்த்தலையில் கடந்த மார்ச் 23-ம் தேதி ஒரு காரிலிருந்து ரூ.1 கோடியை தேர்தல் பறக் கும் படையினர் பறிமுதல் செய் தனர். விசாரணையில், அந்தக் கார் முசிறி தொகுதியின் அப் போதைய எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வருமான செல்வராசுவின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும், காரில் இருந்த அதிமுக நிர்வாகிகள் இந்தப் பணத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறியதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து பேட்டை வாய்த்தலை போலீஸார் விசா ரணை மேற்கொண்டபோது அந் தப் பணம் காரில் வந்த அதிமு கவினருடையது தான் என்பதும், அவர்களிடமிருந்து பிரபல ரவுடி சாமி ரவி தலைமையிலான கும்பல் ரூ.2 கோடியை கொள்ளை யடித்துச் சென்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் உத்தர வின்பேரில், டி.ஐ.ஜி ராதிகா, எஸ்.பி பா.மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மாதையன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரைக் கொண்ட 2 தனிப்படையினர் ரவுடி சாமி ரவியை தேடி வந்தனர்.

இந்நிலையில், பேட்டைவாய்த் தலை சிறுகாடு அருகே காரில் சென்று கொண்டிருந்த சாமி ரவியை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் பிடித்து கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்பேரில், திருச்சியில் உள்ள அவரது நண்பரின் வீட்டிலிருந்து ரூ.1.65 கோடியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT