திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மற்றும் கொடுமுடியாறு அணைப்பகுதிகளில் தலா 17 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல சேர்வலாறு அணைப் பகுதியில் 7 மி.மீ மழை பெய்திரு ந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,673 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,561 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 137.10 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,241 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. நீர்மட்டம் 83.25 அடியாக இருந்தது. 156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் நேற்றையை நீர்மட்டம் 147.93 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 32.10 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 12.13 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 28.50 அடியாகவும் இருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 22 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை, குண்டாறு அணையில் தலா 5 மி.மீ., கருப்பாநதி அணையில் 4 மி.மீ., தென்காசியில் 3.60 மி.மீ., ஆய்க்குடியில் 2.40 மி.மீ., செங்கோட்டையில் 2 மி.மீ. மழை பதிவானது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 177 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 77 அடியாக இருந்தது.
ராமநதி அணைக்கு விநாடிக்கு 92 கனஅடி நீர் வந்தது. 40 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 69.50 அடியாக இருந்தது.
கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 155 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 55 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 65.29 அடியாக இருந்தது.
அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 177 கனஅடி நீர் வந்தது. 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 111 அடியாக இருந்தது. அணைகளில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கார் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.