காதல் திருமணம் செய்து பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தம்பதி நேற்று தஞ்சமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி அடுத்த கோழிமூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (22). இவர், ஜோலார்பேட்டை அடுத்த இடை யம்பட்டு பாபுராவ் பகுதியைச் சேர்ந்த சுவேதா (20) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், காதல் ஜோடி கடந்த 14-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து பேசிய காவல் துறையினர் சுவேதா விருப்பப்படி முரளியுடன் அனுப்பி வைத்தனர்.