தமிழகம்

இஸ்ரோ அறிவிப்பை அலட்சியப்படுத்தியதே பேரிழப்புக்கு காரணம்: மு.க. ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தொடர் மழையால் திருவாரூர் மாவட்டம் காவனூர், சிதம்பர கோட்டகம், புழுதிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை நேற்று பார்வை யிட்ட ஸ்டாலின், விவசாயி களுக்கு ஆறுதல் கூறினார்.

ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் பொருட் களிலும் ஜெயலலிதா படம் ஒட்டியது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே திருவனந்தபுரம் இஸ்ரோ அதிகாரி சிவன் எச்சரிக்கை விடுத் தும், தமிழக அரசு அதை அலட்சியப் படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள் ளாததே பேரிழப்புக்குக் காரணம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணமாக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயி களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனவே, ஒரு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

திருவாரூர் எம்எல்ஏ அலுவல கம், சிதம்பரகோட்டகத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக் களைப் பெற்ற ஸ்டாலின், மழை யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூரில்..

நேற்று காலை தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டா லின், “மத்திய அரசு அளித்த நிதியை அதிமுகவினர் ஊழல் செய்வதற்கும், தேர்தலில் ஆதா யம் அடைவதற்கும் பயன்படுத்தா மல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். மழை நிவா ரணப் பணிகளில் அரசியலைப் புகுத்தாமல், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்பதே திமுகவின் லட்சியம்” என்றார்.

நாகப்பட்டினத்தில்…

நாகை மாவட்டம் தலை ஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சி ஓடாச்சேரியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை நேற்று பார்வை யிட்ட ஸ்டாலின், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களுக்கு ஆறுதல் கூறினார். கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி அரசு உயர் நிலைப் பள்ளியில் தங்க வைக்கப் பட்டிருந்த மக்களைச் சந்தித்த அவர், நிவாரண உதவிகளை வழங்கினார்.

          
SCROLL FOR NEXT