திருநெல்வேலி மற்றும் கன்னியா குமரி மாவட்டங்களில் தாது மணல் அள்ளியதால் சிறுநீரகம் பாதிப்பு மற்றும் புற்றுநோய்க்கு ஆளான மீனவ கிராமங்களில் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலை வர் பீட்டர் ராயன் தாக்கல் செய் துள்ள பொதுநல மனுவில் கூறியிருப் பதாவது: திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் தாதுமணல் அள்ளியதன் விளை வாக மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களின் உடல்நலம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய்த் தாக்குதலால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இந்நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களின் உயிரிழப் புக்கான காரணத்தைக் கண்டறிய புலன் விசாரணை நடத்த வேண் டும்.
கன்னியாகுமரி மற்றும் திரு நெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு தமிழக அரசிடம் மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனது கோரிக்கை மனு அடிப் படையில் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து, மீனவர்களின் உயிரிழப்புக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும்.
எதிர்காலத் தில் உயிரிழப்பு களைத் தடுப்பதற் கும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மறுவாழ்வுக்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்கும் வகையில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.