தமிழகம்

திருப்பத்தூர் அருகே கரோனாவை வென்ற 94 வயது முதியவர்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூர் அருகே 94 வயது முதி யவர் கரோனா நோயில் இருந்து மீண்டுள்ளார்.

கீழச்சிவல்பட்டி இந்திரா நக ரைச் சேர்ந்தவர் கதிரேசநாச் சியப்பன் (94). சமீபத்தில் உற வினரின் துக்க நிகழ்வுக்கு சென்று வந்தவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஆர்டிபிசிஆர் பரி சோதனை எடுத்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சுகாதாரத்துறையினர் அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆக்சி ஜன் அளவு சீராக இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு திருப்பி அனுப்பி வைத்தனர்.

அதன்படி வீட்டில் தனிமைப் படுத்தி கொண்ட அவர், தற் போது முழுமையாக குணம டைந்துள்ளார்.

இதுகுறித்து கதிரேசநாச்சிய ப்பன் கூறியதாவது:

நான் இளமையில் இருந்தே தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வேன். சைவ உணவு மட்டுமே உண்பேன். என்னுடைய வேலைகளை நானே செய்வேன்.

எனக்கு வயதானாலும் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி சாகுபடி செய்கிறேன். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி மறைந்து விட்டார். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர், என்றார்.

SCROLL FOR NEXT