சென்னையில் மழையால் பாதிக் கப்பட்ட 247 கூட்டுறவு ரேஷன் கடைகளில் 28 கடைகளுக்கு மட்டும் தற்காலிக கடைகள் தொடங்கப்பட் டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர், சிந்தாமணி கூட்டுறவு விற்பனை பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பண்ணை பசுமை நுகர் வோர் கடை மற்றும் ரேஷன் கடை களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
காய்கறி விலையை கட்டுப் படுத்த சென்னையில் 2 நகரும் கடைகள் உட்பட 42 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்பட்டன. நவம்பரில் பெய்த மழையால் காய்கறி வரத்து குறைந்ததால், கூடுதலாக 50 கடைகள் தொடங்கப்பட்டன.
தொடர்ந்து கடந்த வாரத்தில் பெய்த கடும் மழையால் சென்னைக்கு காய்கறி வரத்து மேலும் குறைந்தது. இதனால், கூடுதலாக 11 நகரும் கடைகள் மூலம் 32 இடங்களில் காய்கறி விற்கப்பட்டு வருகிறது. மேலும், 100 டன் உருளை கிழங்கு, 75 டன் வெங்காயம் கொள் முதல் செய்யப்பட்டு, 536 கூட்டுறவு கடைகள் மூலம் விற்கப்படுகிறது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இதுவரை ஒரு கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 40 கிலோ காய்கறிகள் ரூ.35 கோடியே 24 லட்சத்துக்கு விற்கப்பட் டுள்ளது.
சென்னையில் வெள்ள நீரால் 274 கூட்டுறவு ரேஷன் கடைகள் பாதிக்கப்பட்டன. மழையால் மிகவும் சேதமடைந்த 29 கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 8 நகரும் ரேஷன் கடைகள் மூலம் அப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
மழையால் சேதமடைந்த 219 கடைகள் முழுமையாக சீரமைக்கப் பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 28 கடை களுக்கு மாற்று ஏற்பாடாக அருகில் தற்காலிக கடைகள் தொடங்கப்பட் டுள்ளன. தற்போது சென்னையில் உள்ள 1,273 கூட்டுறவு ரேஷன் கடை கள் வாயிலாக பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரு கிறது என்றார்.
ஆய்வின்போது கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா உடனிருந்தனர்.