மாணவர்களுக்கு கேள்வி கேட் கும் உரிமையைக் கூட கல்வி நிறுவனங்கள் வழங்குவதில்லை என மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் வி. வசந்திதேவி வேதனை தெரிவித்தார்.
மக்கள் கண்காணிப்பகத்தின் 20-வது ஆண்டு விழா, மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மனித உரிமைகளைக் காப்பதிலும், வளர்த்தெடுப்பதிலும் இன்றைய மாணவர்களின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கம், அரசரடி இறையியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோன்மணீயம் சுந்தரனார் பல்க லைக்கழக முன்னாள் துணை வேந்தரும், தமிழ்நாடு மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான வி. வசந்திதேவி பேசியதாவது: கல்வி நிறுவனங்களில் மா ணவர்கள் கேள்வி கேட்கும் உரிமை இல்லாத நிலை தற்போது உருவாகியுள்ளது. சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கேள்வி கேட்ட மாணவர் தாக்கப்பட்டது வெட்ககரமான நிகழ்வு. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் நாளிதழ்களை படிக்காமலும், செய்திகளை கேட்காமலும் தங் களுக்கென் தனி உலகத்தை உருவாக்கி கொண்டுள்ளனர். இளைஞர்கள் கனவு காண வேண் டும்.
ஆனால், அந்தக் கனவு தமக்குரியதாக மட்டுமின்றி, நாடு மற்றும் சமுதாயத்தை பற்றிய அக்கறை உள்ளதாகவும் இருக்க வேண்டும். அந்த கனவு மூலம் சமுதாய ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும். அடக்குமுறை, ஏகாதி பத்தியத்துக்கு எதிராக போராட வேண்டும்.
தற்போது மாணவர்களின் அரசியல் சிந்தனை அழிக்கப் பட்டு வருகிறது. இன்றைய பாடத் திட்டங்களை கல்விக்கு சம்பந்தமே இல்லாத பெரு முதலாளிகளே உருவாக்குகிறார்கள். அதையே கல்வி நிறுவனங்கள் கற்பிக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் மாண வர்களின் பிரச்சினையைப் பேச மாணவர் சங்கம் அமைக்கப்பட வேண்டும். சமூக வலைதளம் மூலம் போராட்டத்துக்குத் தயாராக வேண்டும். இளைஞர்கள் எந்த ஒரு காரணத்துக்கும் தலைவர்களை தேடிச் செல்ல கூடாது. தலைவர், சாதியைப் பேசாமல் தலைவர் இல்லாத சமுதாயம் அமைக்கப் போராட வேண்டும் என்றார்.
மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச். சுரேஷ் பேசியது: அரசு தன் நாட்டு மக்களின் உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் வேண்டும். அவ்வாறு செய்யாத அரசு மனித உரிமைகளை மீறுவதாக அர்த்தம். இதுவரை மனித உரிமை மீறல்களுக்கு காரணமான எந்த அரசும் தண்டிக்கப்பட்டதில்லை. மாணவர்கள் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
தமுமுக தலைவர் ஜவாஹி ருல்லா எம்எல்ஏ, டெல்லியைச் சேர்ந்த இந்திய தகவல் தொடர்பு கல்வி நிறுவன இணை பேராசிரியர் அமித் சென்குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.