வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடனை, முன்கூட் டியே முடிப்பதற்கு தனிக்கட்ட ணம் வசூலிப்பதாக புகார் கூறப்பட் டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வுக்கு பதிலளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தேனி என்.டி.ஆர். நகரைச் சேர்ந்த ஷகால்தீன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போக்குவரத்து வாகனம் வாங்க 2013-ல் 15.25 சதவீத வட்டிக்கு ரூ.48.90 லட்சமும், 16 சதவீத வட் டிக்கு ரூ.2.51 கோடியும் கடன் வாங்கினேன்.
இரு கடன்களையும் 120 தவணை கள் மாதம் முறையே ரூ.76,664 மற்றும் ரூ.4.20 லட்சம் வீதம் திரும்பச் செலுத்த வேண்டும். 25 தவணைகள் பணம் திரும்ப செலுத்தப்பட்ட நிலையில், 26-வது தவணையில் பணம் முழுவதையும் செலுத்தி கடனை அடைக்க முடிவு செய்தேன்.
ஆனால், இரு கடன்களையும் முன்கூட்டியே முடிக்க, தனியாக ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என நிதி நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டது. கடனை முன்கூட்டியே முடிப்பதற்கு தனிக் கட்டணம் வசூல் செய்வது ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 14.7.2014-ல், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனி நபர்களுக்கு மாறுதல் (புளோட்டிங்) வட்டிக்கு வழங்கும் கடனை முன்கூட்டியே நேர் செய்வதற்கு தனிக் கட்ட ணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தர வுக்கு எதிராக கடனை முன் கூட்டியே செலுத்துவதற்கு தனி கட்டணம் மற்றும் அபராதம் செலுத்துமாறு நிதி நிறுவனம் சார்பில் என்னை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி துணைப் பொது மேலாளருக்கு 15.10.2015-ம் தேதி மனு அனுப்பி னேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கடனை முன்கூட்டியே முடிப்பதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.ரவிச் சந்திரபாபு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். ரிசர்வ் வங்கி துணைப் பொது மேலாளர், நிதி நிறுவன கிளை மேலாளர் ஆகியோர் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.