தமிழகம்

பெருந்துறை அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 14 ஆயிரத்து 507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.

அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி. பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மின்னணு வாக்குப்பதிவில் சில குறைபாடுகள் இருந்ததாகவும், அதனைச் சுட்டிக்காட்டியும் அதனை நிவர்த்தி செய்யவில்லை எனவும், வாக்கு எண்ணிக்கையிலும் சில தவறுதல்கள் இருந்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார். எனவே ஜெயக்குமார் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT