புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வரத் தாமதமானதால், பாதியிலேயே விழா மேடையிலிருந்து இறங்கிச் சென்றார் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி. இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவியதை அடுத்து, “நான் வேண்டுமென்றே தாமதமாக வரவில்லை” என தன்னிலை விளக்கம் கொடுத்தார் ஜூனியரான மெய்யநாதன். மருத்துவக் கல்லூரி விழாவுக்கு முன்னதாக மலையூர் நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று சொன்னாராம் ரகுபதி. அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வருவதற்குள் தானும் இன்னொரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனாராம் மெய்யநாதன். போன இடத்தில் நேரம் இழுத்துவிட்டதாம். அதற்குள் பொறுமை இழந்து பொங்கிவிட்டாராம் சீனியர் ரகுபதி. “இதுக்கு நான் என்னங்கய்யா பண்றது?” என்று பரிதாபமாகப் புலம்புகிறாராம் மெய்யநாதன்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்