தமிழகம்

கரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்க தயார்: போக்குவரத்துக் கழகங்கள் தீவிரம்

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பரவலைதடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்கு தேவையான அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதேபோல், பேருந்துகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, தமிழக அரசு அறிவித்தவுடன், கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். தமிழக அரசு அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இருப்பினும், வரும் 21-ம் தேதிக்குப் பிறகு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT