ஈமு கோழி மோசடி வழக்கில், கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ், கோவை நீதிமன் றத்தில் நேற்று ஆஜர்படுத்தப் பட்டார்.
இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், ‘சுதி ஈமு பார்ம்’ என்ற பெயரில், சிலருடன் சேர்ந்து நிறுவனம் ஒன்றை நடத்தினார். இதில் முதலீடு செய்தவர்களுக்கு, பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் யுவராஜ் உட்பட 5 பேரை, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீ ஸார், கடந்த 2012-ம் ஆண்டில் கைது செய்தனர். ஜாமீனில் சென்ற யுவராஜ் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், டான்பிட் நீதிமன் றத்தில் நேற்று நடைபெற்ற ஈமு கோழி வழக்கில் வேலூர் மத்திய சிறையில் இருந்து யுவராஜ் அழைத்துவரப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டார்.