தி.மலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி, 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். 
தமிழகம்

கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி வள்ளிவாகை ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்: துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வள்ளிவாகை ஊராட்சிக்குட்பட்ட நல்ல தண்ணீர் குளம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை யொட்டி 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலா குமார் தலைமை தாங்கினார். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பி.பி.முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஏ.எஸ்.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்து 100 நாள் திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்ட கொரோனா தடுப்புஉபகரணங்களையும் வழங்கினார்.பின்னர், துப்புரவு பணியாளர்களுக்கு 25 கிலோ அரிசி, மற்றும் காய்கறி கள், மளிகை பொருட்கள் அடங்கியதொகுப்பினையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துரிஞ்சாபுரம் ஒன்றிய கழக செயலாளர் (கிழக்கு) வி.டி.அண்ணாமலை, ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கோதை வேலு, ஒன்றிய உதவி பொறியாளர் ரவிசந்திரன், பணிமேற்பார்வையாளர் பி.கோபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கஸ்தூரி மன்னன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் ஆர்.கார்த்தி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT