தென்னகத்தின் கல்வாரி காந்தல் குருசடி முன்னாள் அதிபர் மற்றும் உதகை ரெக்ஸ் பள்ளியின் நிறு வனத் தலைவருமான பாதிரியார் மேத்யூ கொட்டாரம் (78) வியாழக்கிழமை காலமானார்.
தென்னகத்தில் கல்வாரி என அழைக்கப்படும் காந்தல் குருசடி திருத்தலத்தின் முன்னாள் அதிபர் பாதிரியார் மேத்யூ கொட்டாரம். ஆங்கிலேயர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் மட்டுமே ஆங்கிலம் படிக்க முடியும் என்ற காலகட்டத்தில், ஏழை எளிய குழந்தைகளும் ஆங்கிலக் கல்வி பயில வேண்டும் என்பதற்காக உதகையில் ரெக்ஸ் பள்ளியை நிறுவினார். உதகையில் உள்ள தூய இருதய ஆண்டவர் சர்ச், பெரிய கொடிவேறி சேவியர் சர்ச், பவானி புனித ஆரோக்கிய அன்னை சர்ச், வெலிங்டன் சூசையப்பர் சர்ச் ஆகியவற்றில் பாதிரியராகப் பணியாற்றியுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக கேரள மாநிலம் கோட்டயத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக் கிழமை காலமானார்.
இதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும் பாலான தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.