திருப்போரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்து பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ். 
தமிழகம்

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த, சிறப்பு சிகிச்சை மையத்தை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.

இதில், ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய 10 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மானியத்துடன் கூடிய இடுபொருட்களை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். மேலும், பாரம்பரிய நெல்ரகம் மற்றும் அரிசி வகைகள் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர், திருப்போரூர் ஒன்றியகிராமப்பகுதி விவசாயிகளுக்கான நடமாடும் மண் ஆய்வக வாகனத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT