தமிழகம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் வேளாங்கண் ணியில் சிறப்பு வழிபாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி உலகின் பல்வேறு நாடு களில் இருந்தும் கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள அன்னை ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு வந்திருந்தனர்.

இதனால் பேராலய வளாகம் முழுவதும் மனித தலைகளாகவே காட்சியளித்தது. பேராலயத்தின் முகப்பில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு அதில் மின்விளக்கு அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு 11 மணியில் இருந்து பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. விண்மீன் ஆலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார் தலை மையில் நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் உலக சமாதானத்துக்காகவும், மக்கள் அனைவரும் உடல் நலம் பெற வேண்டியும், இந்தியாவின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய் யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் நிகழ்வு நடைபெற்றது. விண்ணில் இருந்து தேவகுமாரன் உதிப்பதை லட்சக்கணக்கானோர் கண்டு களித் தனர். இயேசு பாலகன் பிறப்பு நிகழ்வுக்குப் பின்னர், தேவகுமார னின் சொரூபத்தை, பிரபாகர் அடிகளார் தொட்டிலில் இட அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலை 8 மணி முதல் 5 மொழிகளில் கூட்டுத் திருப்பலி தொடர்ந்து நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கி புத்தாண்டு வரையிலும் தொடர்ந்து பக்தர்கள் வேளாங்கண் ணிக்கு வந்து கொண்டிருப்பார் கள் என்பதால் வேளாங்கண்ணி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு களைப் பலப்படுத்தியுள்ளனர். கடற்கரை, பேருந்து நிலையம், தங்குமிடங்கள், பேராலய வளாகம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT