தமிழகம்

அரசு பஸ்கள் இயக்கம் குறித்து முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்

செய்திப்பிரிவு

பொது போக்குவரத்து தொடங் குவது குறித்து முதல்வர் அறி விப்பார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்களில் பராமரிப்பு இன்றி திருப்புத்தூர் அருகே என்.புதூர், இளையான்குடி அருகே தாயமங்கலம் விலக்கு ஆகிய இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதை அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், மெய்யநாதன் நேற்று பார்த்தனர்.

குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன், ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்எல்ஏ, குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் மணிமோகன் ஆகியோர் உடனி ருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக 182 கி.மீ. தூரத்துக்கு ராட்சதக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் குழாய்களை சீரமைக்கவில்லை. இதனால் தினமும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டிய இடத்தில் தற்போது 78 மில்லியன் லிட்டரே கிடைக்கிறது.

இது குறித்த புகார் முதல்வருக்கு சென்றதை அடுத்து, முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார். தலைமைப்பொறியாளர் கண்காணிப்பில் திட்ட மதிப்பீடு செய்து சேதமான குழாய்களை விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவித்த நிலையில் பொது போக்குவரத்து எப் போது தொடங்கப்படும்? என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘பொது போக்குவரத்து குறித்து முதல்வர் அறிவிப்பார்’ என்றார்.

நரிப்பையூர் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூரில் செயல்படாமல் உள்ள கடல்நீரை குடி நீராக்கும் திட்டம், கடந்த ஆட்சியில் சாயல்குடி அருகே குதிரைமொழியில் செயல்படுத்த திட்டமிட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை அமைச்சர் கள் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறிய தாவது: நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.60 கோடி மதிப்பில் மீண்டும் புதுப்பிக்கப்பட உள்ளது. குதிரைமொழியில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும் என்றார்.

SCROLL FOR NEXT