தமிழகம்

காவல் நிலையத்தில் பெண் கொலை: திட்டமிட்டே கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்

செய்திப்பிரிவு

சென்னை தாம்பரம் அருகே அகரம் அன்னை சத்யா நகர் அண்ணா பிரதான சாலையில் வசிப்பவர் கணபதி(26). இவரது மனைவி கவுரி(23). கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நேற்றுமுன்தினம் (21-ம் தேதி) தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திலேயே கவுரியை கணபதி கொலை செய்தார்.

இதுகுறித்து கணபதி கொடுத் துள்ள வாக்குமூலத்தில், ‘‘கார்த்திக் என்ற நபருக்கும் கவுரிக்கும் தவ றான தொடர்பு ஏற்பட்டது. கவுரியை பலமுறை கண்டித்தும், கார்த்திக் உடனான தொடர்பை விடவில்லை. சபரிமலைக்கு சென் றேன். திருச்சி வரை சென்றிருந்த நிலையில், எனது மனைவி கார்த்திக் குடன் சென்றிருப்பதாக செல் போனில் தகவல் கிடைத்தது. இத னால் பயணத்தை ரத்து செய்து உடனே சென்னை திரும்பினேன். கவுரியை கொலை செய்ய முடிவு செய்து ரூ.100 கொடுத்து ஸ்குரூ டிரைவரை வாங்கினேன். காவல் நிலையத்தில் கவுரியை பார்த்ததும் ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT