சரத்குமார். 
தமிழகம்

திருமணம் செய்துகொள்வதில் கருத்து வேறுபாடு; வாணியம்பாடியில் காதலியை வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: காவல் துறையினர் விசாரணை

செய்திப்பிரிவு

திருமணம் செய்து கொள்வதில் கருத்து வேறு பாடு காரணமாக காதலியை வெட்டிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசி என்ற சரத்குமார் (26). இவரும், அதே பகுதியில் வசிக்கும் 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இதனால், இருவரும் சில நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருந் துள்ளனர்.

இதற்கிடையில், இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சரத்குமார் பேச வேண்டும் என கூறியுள்ளார். அதனை நம்பிய இளம்பெண் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அருகே உள்ள மைதானத்துக்கு சென்றுள் ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம் பெண்ணை வெட்டி விட்டு சரத்குமார் தப்பினார்.

இதில், படுகாயம் அடைந்த இளம்பெண் அவரது வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டுவாணியம்பாடி அரசு மருத் துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய சரத்குமாரை தேடி அவரது வீட்டுக்குச் சென்றனர். வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT