தமிழகம்

‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்தால் 15 ஆண்டுகளாக சந்தித்த சோதனைகள் ஏராளம்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேதனை

செய்திப்பிரிவு

‘லஞ்சம் தவிர்த்து... நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை 15 ஆண்டுகளாக தாங்கி வந்ததால் ஏராளமான சோதனை களை சந்தித்துவிட்டேன்’ என சட்ட ஆணையர் உ.சகாயம் தெரிவித்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோஃபர், நிதி காப்பாளர் ஹெலன் ரத்தின மோனிகா, பயிற்சி மைய இயக்குநர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

மையத்தை தொடக்கி வைத்து சட்ட ஆணையரான உ.சகாயம் பேசியதாவது: ஆட்சியர்களை தேடி மாற்றுத்திறனாளிகள் மனு அளித்த காலம் மாறி, அவர்களே ஆட்சியர் களாக வேண்டும். அவர்களைத் தேடி மற்றவர்கள் வரவேண்டும். எங்கெல்லாம் இந்த சமூகத்தினர், மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற னரோ, ஒதுக்கப்பட்டுள்ளனரோ அவர்களை உயர்த்திக்காட்ட வேண் டும். இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல. என் உள்ளக் கிடக்கில் இருக்கும் ஆசை. தமிழை இன்றும் காத்து வருபவர்கள் கடைக்கோடியில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள்தான். வாய்ப்புகளை மிகச்சரியாகப் பயன் படுத்திக்கொண்டால் யார் வேண்டு மானாலும் ஐஏஎஸ் அதிகாரி ஆக லாம். லட்சியத்துடன், கடின உழைப் பும் இருப்பது அவசியம். ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்ற வேண்டும். வாய்ப்பு ஒருமுறை மட்டுமே வரும். இதை மிகச்சரியாக பயன் படுத்துபவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.

அரசு நிர்வாக கோபுரத்தின் உயர்ந்த பதவிகள் ஐஏஎஸ் அதிகாரி களால்தான் நிரப்பப்படுகின்றன. அரசியல் தளங்களில் பல நெருக் கடிகளால் ஐஏஎஸ் போன்ற பதவி களின் முக்கியத்துவம் குறைந்தாலும், லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு ஐஏஎஸ் ஆகத்தான் உள் ளது. ஐஏஎஸ் அதிகாரியானால் யாரையும் காக்க வைக்காதீர்கள். நோகடிக்காதீர்கள். உண்மையாக, மக்களுக்காக சேவை செய்யும் மனிதர்களாக இருக்க வேண்டும். நான் எப்படி உருவாகியிருக்கிறேன் என்பதைவிட, நான் எப்படி மக்களை உருவாக்கி இருக்கிறேன் என்பது தான் முக்கியம். நான் ஐஏஎஸ் அதிகாரியானதைவிட, எத்தனை ஐஏஎஸ் அதிகாரியை உருவாகியுள் ளேன் என்பதில்தான் பெருமை.

‘லஞ்சம் தவிர்த்து... நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகத்தை இந்த மையம் தாங்கியுள்ளது. இந்த வாசகத்தை 10, 15 ஆண்டுகளாக நான் தாங்கி வந்தபோது சந்தித்த சோதனைகள் ஏராளம். நம் பிள்ளைகளுக்கு அத்தகைய சோதனைகள் வேண்டாம். இந்த வாசகத்துக்குப் பதிலாக நேர்மை ஐஏஎஸ் பயிற்சி மையம் என மாற்றிவிடலாம். நேர்மை அதிகாரத்துக்கு மட்டுமல்ல. தமிழ் சமுதாயமும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றார்.

உளவுப் பிரிவு கண்காணிப்பு தீவிரம்

சகாயம் அரசியலுக்கு வர வலியுறுத்தி சமீபத்தில் சென்னையில் இளைஞர்கள் பலர் பேரணி நடத்தினர். இந்த நிலையில் அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி என்பதால் சகாயத்தை உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் பலரும் முழுமையாகக் கண்காணித்தனர். சகாயத்தினுடைய ஒவ்வோர் அசைவு, வார்த்தைகள், அவரை சந்தித்தவர்கள் என பல்வேறு விஷயங்களையும் மிக உன்னிப்பாகக் குறிப்பெடுத்து உடனுக்குடன் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT