தமிழகம்

மார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

எல்.மோகன்

குமரி தந்தை என போற்றப்படும் மார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.

தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் நாகர்கோவில் வேப்பமூட்டில் அமைந்துள்ள நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; மார்ஷல் நேசமணி கேரளாவில் கர்நூலில் ஆசிரியராக பணியாற்றியபோது வறுமையில் வாடிய சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவியரின் வீடுகளுக்கு சென்று அவர்களது பெற்றோரை அணுகி குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புமாறு வேண்டி, அதை செயல்படுத்தி காட்டினார். குறிப்பாக தலித் மக்களின் கல்வி உயர்விற்காக அவர் பாடுப்படார். இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் மார்ஷல் நேசமணி நீங்காத இடத்தை பிடித்தார்.

பனை, மற்றும் பனைசார்ந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, அவர்களது நலனுக்காக போராடி வெற்றி பெற்றார்.

1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு முதல் காரணமாக விளவங்கியவர் மார்ஷல் நேசமணி ஆவார். இதனால் தான் மார்ஷல் நேசமணியின் புகழையும், பெருமையையும் நினைவு கூர்ந்து வருகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த். எம்.ஆர்.காந்தி எம்.எல்.., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மார்ஷல் நேசமணியின் பேரின் ரெஞ்சித் அப்பலோஸ், செய்தி மக்கள் தொடர்புத்தறை அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT