தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணியின் ஆதரவாளர்கள் இருவர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர். பதிலுக்கு இளங் கோவனின் ஆதரவாளர்களை மக ளிர் காங்கிரஸில் இருந்து நீக்கு வதாக விஜயதாரணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தபோது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகை யில் நடந்துகொண்ட சாந்தா ஸ்ரீநி, ரவிராஜ் ஆகியோர் கட்சியின் அடிப் படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவர் களோடு காங்கிரஸார் யாரும் எவ் வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளை பார்வையிடுவதற் காக ராகுல் காந்தி நேற்று முன் தினம் சென்னை வந்தார். மீனம் பாக்கம் விமான நிலையத்தில் அவரை வழியனுப்ப தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜய தாரணிக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. அப்போது இளங்கோவன், விஜயதாரணி தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விஜயதாரணி ஆதரவாளர்கள் இருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் விஜயதாரணி கூறியதாவது:
ராகுல் காந்தியை வழியனுப்பி வைக்க மீனம்பாக்கம் விமான நிலை யம் சென்றபோது மகளிர் காங் கிரஸ் தலைவரான என்னை இளங் கோவன் அனுமதிக்கவில்லை. எம்எல்ஏவான என்னை காவல் துறையினர் உதவியுடன் தடுத்து விட்டார். எனவே, அவர் மீது சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்க இருக்கிறேன்.
இளங்கோவன் கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அறிவித்துள்ள சாந்தாஸ்ரீநி, ரவிராஜ் இருவரும் ராகுலின் நிகழ்ச்சி நடந்த எந்த இடத்துக்கும் வரவில்லை. என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவர்களை நீக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. மகளிர் காங் கிரஸ் நிர்வாகிகளை நீக்கும் அதி காரம் அவருக்கு இல்லை. மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவராக சாந்தாஸ்ரீநி தொடர்வார்.
மகளிர் காங்கிரஸ் நிர்வாகி களை சென்னை விமான நிலையத் திலும், சத்தியமூர்த்தி பவனிலும் தரக்குறைவாகப் பேசி தாக்க முற்பட்ட ஆலிஸ் மனோகரி, பூங்கொடி ஆகியோர் மகளிர் காங் கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு விஜயதாரணி கடிதம் எழுதியிருந்தார். தரக்குறைவாக பேசிய இளங்கோவன் மீது பெண் கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வே்டும் என்று விஜயதாரணி ஆதரவாளரான சாந்தாஸ்ரீநி, காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இளங் கோவன், விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் இளங்கோவன் - விஜயதாரணி இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பது தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.