தமிழகம்

அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையத்தில் பயின்றால் போதும் ஓட்டுநர் உரிமம் பெறலாம்: ஜூலை 1 முதல் புதிய விதி அமல்

செய்திப்பிரிவு

ஜூலை 1ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

புதிய விதிமுறையால், சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பார்கள் இதனால் சாலை விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019ன் 8ம் பிரிவின்படி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகார விதிகளை மாற்ற முடியும். அதன்படியே இந்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய விதிமுறையின் படி அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

1. இத்தகைய மையங்களில் பயிற்சியாளார்களுக்கு உயர்தர பயிற்சி அளிக்கும் வகையில் பிரத்யேக ஓடுதளங்கள் இருக்கும். இதனால், சிறப்பான பயிற்சி உறுதி செய்யப்படும்.

2. இந்த மையங்கள் மூலம் மோட்டார் வானச் சட்டம் 1988ன் படி, ஒரு வாடிக்கையாளர் தனது வாகனம் ஓட்டும் திறனை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் பயிற்சிகளை வடிமைக்கலாம்.

3. இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் லைசன்ஸ் வழங்கப்படும் போது நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கத் தேவையில்லை. இதனால், பயிற்சி முடிந்தவுடனேயே வாகன ஓட்டிகளுக்கு லைசன்ஸ் கிடைத்துவிடும்.

4. அதேபோல் இந்த மையங்களில் தொழிற்சாலைகளுக்கான வாகனங்களை இயக்கும் வகையிலும் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதனால், பிரத்யேக, சிறப்பு வாகனங்களை இயக்குவோரின் பற்றாக்குறை தீரும். இதனால், சாலை விபத்துகள் தவிர்க்கப்படும்.

SCROLL FOR NEXT