காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் “மனிதம்” என்ற கரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா மற்றும் படக்குழுவினர் 
தமிழகம்

கரோனா விழிப்புணர்வு குறும்படம்- காரைக்கால் ஆட்சியர் வெளியிட்டார்

வீ.தமிழன்பன்

தனியார் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு குறும்படத்தை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று(ஜூன் 11) வெளியிட்டார்.

காரைக்காலைச் சேர்ந்த தனியார் யு டியூப் சேனல்(கேகேசி) ஒன்றின் மூலம் கரோனா விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மக்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகள், பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், கடமைகள், கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு, கரோனா தொற்றால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களின் நிலைமை உள்ளிட்ட அம்சங்களுடன் மனிதராய் வாழ்வோம் மனிதரைக் காப்போம் என்ற கருப்பொருளில் ”மனிதம்” என்ற பெயரில் இக்குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

13 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை காரைக்காலைச் சேர்ந்த பி.அருண்சிவா என்பவர் இயக்கியுள்ளார். காரைக்காலில் உள்ள ஸ்டூடியோ நிறுவனம் ஒன்று ஒளிப்பதிவு செய்துள்ளது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இப்படத்தை வெளியிட்டார். மாவட்ட துணை ஆட்சியர்(பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், தேர்தல் துறை கண்காணிப்பாளர் பாலு(எ)பக்கிரிசாமி, படக்குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT