டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார்; நடவடிக்கை எடுக்க தினகரன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு மழையில் நனைந்த நெல்லுக்கு எந்தவித பிடித்தமும் இல்லாமல் முழு விலையையும் வழங்கிட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 11) தன் ட்விட்டர் பக்கத்தில், "காவிரி டெல்டா பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நெல் கொள்முதல் செய்வதில் நிகழும் குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு மழையில் நனைந்த நெல்லுக்கு எந்தவித பிடித்தமும் இல்லாமல் முழு விலையையும் வழங்கிட வேண்டும்.

மேலும் சில இடங்களில் வியாபாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அவர்களை அலைக்கழிப்பதாக எழுந்திருக்கும் புகார்கள் குறித்தும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

பல்வேறு மோசமான சூழல்களிலும் பாடுபட்டு விளைவிக்கும் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT