தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி ஏராளமானோர் சாலைகளில் சுற்றுவதால் வாகன சோதனையை மீண்டும் தீவிரப்படுத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று (11-ம் தேதி) முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட உள்ளது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம்விதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 62 நாட்களில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 13.50லட்சம் வழக்குகளும், தனிமனிதஇடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 71,469 வழக்குகளும்பதிவு செய்யப்பட்டுள்ளன.