தமிழகத்தில் பல்வேறு சாதனையா ளர்கள் உருவாகக் காரணமான ரயில்வே மைதானங்கள் வர்த்தக நோக்கில் தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. அண்மையில் கடிதம் எழு தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரயில்வேக்குச் சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை ரயில் நிலம் மேம்பாட்டு ஆணையத்தின் வசம் வணிகப் பயன்பாட்டு நோக்கத்துக்காக ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. இதில் சென்னை ஐ.சி.எஃப். விளையாட்டு வளா கமும் இடம் பெற்றுள்ளது.
விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேச விரோத செயல். இந்திய கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷா போன்றோர் சென்னை ஐ.சி.எஃப். ரயில்வே மைதானம் மூலமே உயரங்களைத் தொட்டனர். அர் ஜுனா விருது பெற்றவர்களில் பலர் ரயில்வே ஊழியர்கள். இவர் கள் அனைவரும் கட்டணம் இன்றி ரயில்வே மைதானங்களால் முன் னேறினர்.
இது வெறும் பணம் பண் ணுகிற செயல் அல்ல. தேசப் பெருமையைப் பறை சாற்றுகிற ஆற்றல் மிக்க அடித்தள வீரர்களுக்கான வழியை அடை க்கும் அபாய முடிவு. இத்தவறான முடிவை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நடவடிக்கை ரயில்வே தொழிற்சங்கங்கள், விளையாட்டுப் பிரிவு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டிஆர்இயூ தொழிற் சங்க மதுரை கோட்டச் செயலர் சங்கரநாராயணன் கூறியதாவது: சென்னையைத் தொடர்ந்து மதுரை ரயில்வே மைதானமும் தனியாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இதை மத்திய அரசு கைவிடவேண்டும். இம்மைதானம் மாநில நிர்வாகத்தால் ரயில்வே ஊழியர்களின் நலன் கருதி விளையாட்டுத் திறனை வளர்க்க ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள், ஊழி யர்கள் கொண்ட அமைப்பு மூலம் சலுகை கட்டணத்தில் உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு உபகரணங்கள், மைதான இருக் கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை விளையாட்டுப் போட்டிகளும் நடத் தப்படுகிறது. ரயில்வே ஊழியர்கள் குழந்தைகள் மட்டுமின்றி மதுரை நகரில் வசிக்கும் பிற குழந் தைகளின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் இடமாகவும், மத்திய, மாநில வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் மைதானமாகவும் திகழ்கிறது.
இந்த மைதானத்தை தனி யாருக்கு ஒப்படைக்கும் சூழல் ஏற்பட்டால், அதை தவிர்த்து மாந கராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக் கலாம் என்றார்.