திருச்சி மாநகராட்சியில் பணியாற் றும் தூய்மைப் பணியாளர்கள் 3,000 பேருக்கு முட்டை வழங்கும் பணியை மாநில நகர்ப்புற வளர்ச் சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர் களாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் ஊட்டச்சத்து பெறும் வகையில் தலா 30 முட் டைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணியை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.இனிகோ இருதயராஜ், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி மற்றும் மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மைப் பொறியாளர் எஸ்.அமுத வல்லி, செயற் பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள், மார்க்கெட் டிங் சொசைட்டி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லால்குடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.1.38 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத் தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், மற்றொருவருக்கு சக்கர நாற் காலி என 4 பேருக்கு உதவி உபகர ணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ அ.சவுந்தரபாண்டியன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரா.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.குணசேகரன், கு.சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.