வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மது ஒழிப்பு அமலாக்கப்பிரிவு ஐஜி லோகநாதன், மது ஒழிப்பு குறித்து காவல் துறையினருக்கு விளக்கினார். அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர். 
தமிழகம்

சாராயம், வெளிமாநில மதுவை ஒழிக்க வேலூர் மாவட்டத்தில் ‘ஆபரேஷன் விண்ட்’ சோதனை: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி லோகநாதன் ஆய்வு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில் கடத்தலை தடுக்க ‘ஆபரேஷன் விண்ட்’ சோதனை தொடங்கியுள்ளதை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜி லோக நாதன் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப் பாடுகளால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாமல் உள் ளன. இதனால், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினசரி ரயில், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலமாக மதுபாட்டில்களை கடத்தி வருகின் றனர். அதேபோல், சாராய விற்ப னையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இது காவல் துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, வேலூர் மாவட் டத்தில் கலால் பிரிவு காவலர்கள் மற்றும் உள்ளூர் காவல் நிலைய காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, ‘ஆபரேஷன் விண்ட்’ என்ற பெயரில் சோதனையை தொடங்கியுள்ளனர். கலால் பிரிவு, ஆயுதப்படை காவலர்கள் என சுமார் 50 பேர் அடங்கிய குழுவினர் அடுத்த 15 நாட்களுக்கு இந்த சோதனையில் ஈடுபடவுள்ளனர்.

சாராயம் அதிகம் காய்ச்சப்படும் அல்லேரி, பீஞ்சமந்தை, குருமலை,பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தவுள்ளனர்.

அதேபோல், ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக் கையை கடுமையாக்க உள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜி லோகநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ‘ஆபரேஷன் விண்ட்’ சோதனையை தீவிரமாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

‘‘ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டுள்ளதால் சாராயம் மூலம் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும். வெளி மாநிலங் களில் இருந்து கள்ளத்தனமாக மது பாட்டில்கள் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும்.

ஸ்பிரிட்டை பயன்படுத்தி போலி மதுபானம் விற்பனை நடைபெறுவதையும் கண்காணித்து தடுக்க வேண்டும்’’ என வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு ஐஜி லோகநாதன் அறிவுரை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT