மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 30 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்க நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்கள் செயல்படுகின்றன.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் 30 மருத்துவக் குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகளை அளிக்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் 044-25305111, 044-25305112, 9840185742, 9841170145, 9842233782 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.