தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு மாநிலங் கள் நிதியுதவி அளித்து வருகின்றன. குஜராத் மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் தமிழகத்துக்கு ரூ.5 கோடி நிதி அளித்தார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக வெள்ள நிவாரணத்துக்காக தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை அளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள் கிறேன். இயற்கை பேரிடரை சந்தித்து வரும் தமிழக மக்களுக்கு தகுந்த நேரத்தில் நீங்கள் உதவியதற்கு நன்றி. வெள்ள பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்ப தமிழக அரசு தொடர்பணிகளை செய்து வருகிறது என தெரிவித்துள் ளார்.