சென்னையில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்டு முகாம்களில் தங்கி யுள்ள மக்களுக்காக வேலூர் ஆவினில் இருந்து 62 டன் பால் பவுடர், 5 லாரிகளில் அனுப்பப்பட்டது.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு வதற்காக, வேலூர் ஆவினில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12 டன் பால் பவுடர் , நேற்று 50 டன் பால் பவுடர் 5 லாரிகள் மூலம் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் இருந்து சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 100 பேர் அடங்கிய துப்புரவுப் பணியாளர்கள் நேற்று, 2 பேருந்துகள் மூலம் தாம்பரம் நகராட்சிக்கு சென்றனர். இவர்களுடன் 2 டிப்பர் லாரிகள் அனுப்பப்பட்டன.
அதேபோல, திருவண்ணாமலை நகராட்சி, ராணிப்பேட்டை, ஆற்காடு, திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் நகராட்சிகள் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் 60 பேர் கொண்ட குழுவினரும், 5 டிப்பர் லாரிகள் மற்றும் உபகரணங்களுடன் சென்னைக்கு சென்றனர்.
வேலூர் சுகாதாரத் துறை சார்பில் 2 மருத்துவக் குழுவினர் கடந்த 15 நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேலூரில் பொதுமக்களிட மிருந்து ரொட்டி, பிரெட், பிஸ்கெட் ஆகியவற்றை சேகரித்து கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர் ஜனனி சதீஷ்குமார் தலைமையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிஸ்கெட், ரொட்டி ஆகியவை சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ரூ.10 லட்சம் மதிப்பில் 5 ஆயிரம் போர்வைகள், 5 ஆயிரம் கிலோ அரிசி, 1,000 பிஸ்கெட், பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை தி.மலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரியிடம் தி.மலை ஜெயின் சங்கம் சார்பில் நேற்று ஒப்படைத்தனர்.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த விஐடி மாணவர்கள், நிவாரண பொருட்களை சேகரித்து தனியார் பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சேகரிப்படும் நிவாரண பொருட்கள். அடுத்த படம்: ஜெயின் சங்கம் சார்பில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போர்வைகள்.