ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், வாகன சோதனைகள் செய்வதை போலீஸார் குறைத்துள்ளனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் போலீஸாரும் வாகன சோதனைகளின் தீவிரத்தைக் குறைத்துள் ளனர்.
ஆனால், மாலை 6 மணிக்குபிறகு வாகன சோதனையைபோலீஸார் தீவிரப்படுத்துகின்றனர். அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, இ-பதிவு இருக்கிறதா என சோதனை செய்தனர். இ-பதிவு இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்தனர். வாகனங்களை பறிமுதல் செய்வது ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து நடத்தப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த 60 நாட்களில் மட்டும் முகக் கவசம் அணியாதவர்கள் மீது 13 லட்சத்து 14 ஆயிரத்து 563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 69 ஆயிரத்து 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.