கரோனா மூன்றாம் அலை பரவல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக மதுரை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் 50 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று முதல் அலையில் பெரியவர்களை அதிகம் பாதித்தது. இரண்டாவது அலையில் இளம் வயதினரை அதிகம் பாதித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இரண்டாவது அலையில் ஏராளமானோர் இறந் தனர்.
அதனால் பொதுமக்கள் இந்த தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆர்வமாகத் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இரண்டாவது அலை பாதிப்பில் மொத்த எண்ணிக்கையில் 3 முதல் 4 சதவீதக் குழந்தைகள் மட்டுமே சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரண்டாவது அலையின் தாக்கமே முடிவடை யாத நிலையில் மூன்றாவது அலை குறித்த தகவல் பரவி வருகிறது. அப்போது கரோனா தொற்று குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று மருத்துவ உலகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கையாக மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைக்காக பிரத்யேக கரோனா வார்டு தொடங்கப் பட்டுள்ளது. இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை வழங்கி அவர்களைக் கண் காணிக்க ‘ஜீரோ டிலே வார்டு சிசிசி’ என்ற பெயரில் வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு கூறியதாவது:
இரண்டாவது அலையில் குழந்தைகள் மிகக் குறைந்த அளவே கரோனாவால் பாதிக்கப் பட்டனர். இதுவரை மருத்துவ மனையில் அதிகபட்சம் 6 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனாலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக 50 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா வார்டை ஏற்படுத்தி உள்ளோம். இங்கு தற்போது 5 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர் களைக் கண்காணிக்க குழந்தை கள் நல மருத்துவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்றார்.