தமிழகம்

சென்னை மாவட்டத்தில் நகல் ஆவணம், சான்றிதழ்கோரி 2 நாளில் 10 ஆயிரம் பேர் மனு

செய்திப்பிரிவு

சென்னையில் 10 தாலுகாக்களில் நகல் ஆவணங்கள், சான்றிதழ் கோரி 2 நாட்களில் 10,620 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்களை இழந்தவர்கள் நகல் ஆவணங்களை சிறப்பு முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் 14-ம் தேதி தொடங்கியது.

10 தாலுகாக்களில் சிறப்பு முகாம்கள்

சென்னையில் 10 தாலுகாக்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இந்த முகாம்களில் நேற்று முன்தினம் 5,620 விண்ணப்பங்கள் வந்தன.

2-வது நாளான நேற்றும் ஏராளமானோர் நகல் ஆவணம் கேட்டு விண்ணப்பித்தனர். வருவாய் துறை தொடர்பாக 220 மனுக்கள், பள்ளிக்கல்வி துறை 950, பத்திரப்பதிவு 157, போக்குவரத்து 1,265, உணவுப்பொருள் வழங்கல் 390, சென்னை மாநகராட்சி 1,282, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு துறை 401, பொதுத்துறை வங்கி பிரிவு 220, எண்ணெய் நிறுவனங்கள் 91, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை 12, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை 12 என சென்னையின் 10 தாலுகாக்களிலும் மொத்தம் 5 ஆயிரம் பேர் சான்றிதழ்கள், ஆவண நகல்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT