தமிழகம்

முதல்வர் நிவாரண நிதிக்கு போக்குவரத்து ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் ரூ.14.46 கோடி

செய்திப்பிரிவு

அரசு மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இயன்ற அளவிலான நிதி உதவியை ‘முதல்வர் பொது நிவாரணநிதி’க்கு வழங்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வகையில் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் 1.20 லட்சம் பணியாளர்களின் ஒருநாள் ஊதியமாக ரூ.14 கோடியே 46 லட்சத்து 70,635-க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம், போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று வழங்கினார். போக்குவரத்து துறை கூடுதல் செயலர் தயானந்த் கட்டாரியா, அதிகாரிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT