தமிழகம்

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி, உறவினர் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் திடீர் சோதனை

செய்திப்பிரிவு

மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதாகியுள்ள அட்டாக் பாண்டி மற்றும் உறவினர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பொட்டு சுரேஷ் கொலையில் முன்னாள் வேளாண் விற்பனைக் குழு தலைவர் அட்டாக் பாண்டி உட்பட 18 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வழக்கில் தான் தெரிவித்த பல தகவல்களை முழுமையாக விசாரிக்கவில்லை என அட்டாக் பாண்டி டி.ஜி.பி.க்கு எழுதிய கடிதத்தால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

மதுரை டிஎஸ்பி மன்மதபாண் டியன் தலைமையில் 6 ஆய்வா ளர்கள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் வரும் டிச. 17-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள் ளனர். இதற்காக ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட திமுக பிரமுகர் கள் உட்பட பலரிடம் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரித்து வாக்குமூலம் பெற்று வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து அட்டாக் பாண்டி மற்றும் கூட்டாளிகள் தெரிவித்தது சரிதானா என பல்வேறு தரப்பி லும் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. அட்டாக் பாண்டியின் உறவினர் திருச்செல்வம் என்பவர் உட்பட 2 பேரிடம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள் ளது.

வழக்கு விசாரணையின் முன் னேற்றம் குறித்து சிபிசிஐடி எஸ்.பி. அமித்குமார் சிங் நேற்று முன்தினம் மதுரையில் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக நேற்று டிஎஸ்பி மன்மதபாண்டியன் தலைமையில் ஆய்வாளர்கள் கோட்டைச்சாமி, பெத்துராஜ், மணிவண்ணன் தலைமையில் 6 தனிப்படையினர் வில்லாபுரத்திலுள்ள அட்டாக் பாண்டியின் வீடு மற்றும் கீரைத் துறை, வில்லாபுரம் பகுதியிலுள்ள அட்டாக் பாண்டியின் சகோதரி மற்றும் உறவினர்கள் சந்தானம், போஸ், கார்த்திக் உட்பட 6 பேர் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸார் கூறியதாவது: கொலைக்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஏதும் கிடைக்கிறதா என இந்த சோதனையை நடத்தினோம். அட்டாக் பாண்டி தனது உறவினர் களிடம் ஏதாவது ஆதாரங்களைக் கொடுத்து வைத்திருக்கலாம் என்ற தகவலின்பேரில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணிவரை இந்த சோதனை நடைபெற்றது. பெரிய அளவில் ஏதும் சிக்கியதாக தகவல் இல்லை என்றனர்.

SCROLL FOR NEXT