மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட காவிரி டெல்டா மாவட்டங் களின் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் பேசியதாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ரூ.25 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் ஜெயலலிதா. எதற்காக? கொள்ளை யடிப்பதற்காகவா?.
கொள்ளிடம் ஆற்றில் தடுப் பணை கட்டாததால், 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் தடுப்பணை கட்ட ரூ.700 கோடி நிதி ஒதுக்கியது என்ன ஆனது என்று தெரியவில்லை. தடுப்பணை கட்டியிருந்தால், ஆறுகளைத் தூர் வாரியிருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
கரும்பு விவ சாயிகளுக்கு இந்த அரசால் உரிய விலை கொடுக்க முடியவில்லை. நாகை மாவட்டம் தலைஞாயிறு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் மூடவுள்ளதாகக் கூறுகின்றனர். இதனால், விவசாயி கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படு வார்கள். ஆலைகளை மூடுவதற்கு ஒரு அரசு எதற்கு?
அதிமுக மட்டுமல்ல, திமுகவும் மக்களுக்கு துரோகம் செய்த கட்சி தான். கருணாநிதிதான் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டார். அதனால், அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட்டால், மீண்டும் புதை குழியில்தான் விழுவீர்கள் மக்களே என்றார் விஜயகாந்த்.
இடையிடையே பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்களைக் கடுமையாகச் சாடிய விஜயகாந்த், “நான் செய்தது தவறில்லை, மக்களைத் தவிர யாரிடமும் மன்னிப்புக் கோரப் போவதில்லை” என்றார்.
விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்தபோது, மேடை எதிரில் இருந்த பஸ் ஸ்டாப் முகப்பில் பொருத்தி யிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்த விஜயகாந்த், “அவரது முகத்தைக் கூட பார்க் கப் பிடிக்கவில்லை. அதை மறை யுங்கள்” என்றார். அதன்படி, அருகில் தொங்கிய விஜயகாந்தின் பேனரைக் கொண்டு சில தொண்டர்கள் ஜெயலலிதா படத்தை பாதியளவு மறைத்தனர். சிறிது நேரம் கழித்து ஆர்வ மிகுதியில் ஒரு தொண்டர், பேனர் கயிற்றை அவிழ்த்து ஜெயலலிதா படத்தை முழுமையாக மறைக்க முயன்றார். அப்போது, விஜயகாந்தின் பேனர் அறுந்து விழுந்தது. இதைப் பார்த்த விஜயகாந்த், அப்படியென்றால், ஜெயலலிதா படத்தையும் அகற் றுங்கள் என்றார். உடனே, தொண் டர்கள் ஜெயலலிதா படத்தை பெயர்த்து வீசினர்.
கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்து தேமுதிகவினர் சென்ற சிறிது நேரத்தில், மாவட்ட ஆவின் தலைவர் காந்தி தலைமையில் வந்த அதிமுக வினர் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட மேடை பகுதியில் இருந்த விஜயகாந்த் பேனர்கள் அனைத்தையும் கிழித்து எறிந்த துடன் மேடையை பெயர்த்தெடுத் தனர். இனிமேல் விஜயகாந்த் தஞ்சைக்கு வந்தால் ஓட ஓட விரட்டுவோம் என்று கோஷமிட்ட துடன், அவரைத் திட்டித் தீர்த் தனர். இதனால், அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.
விஜயகாந்த் மீது வழக்கு பதிவு
பேனர் கிழிப்பு சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகி எம்.ரங்கசாமி, தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விஜயகாந்த், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் ஜெயப்பிரகாஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் பரமசிவம், தஞ்சை மாநகரச் செயலாளர் அடைக்கலம் உள்ளிட்ட 59 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேமுதிக புகார்
தங்கள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட பேனர்களை கிழித்தெறிந்து, கட்சியின் தலைவரை அவதூறாகப் பேசிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் கிழக்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தேமுதிகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல்
விஜயகாந்த் தலைமையில் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு கும்பகோணம் நோக்கி தேமுதிகவினர் வேனில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, விஜயகாந்த் உருவபொம்மையை எரிப்பதற்காக அதிமுக வினர் கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தயாராகிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த தேமுதிக வினரின் வேனை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் வேன் கண்ணாடிகள் உடைந்து சேத மடைந்தன. வேனிலிருந்த தேமுதிகவினர் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக, விஜயகாந்த் பங்கேற்ற ஆர்ப்பாட் டத்தின்போது, முதல்வர் ஜெயலலிதாவின் படம் தேமுதிகவினரால் அகற்றப்பட்டதன் எதிர் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்துள்ளது.