தமிழகம்

போலி முகநூல் பக்கம்: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் புகார்

செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், அவரது மனைவி பெயரில் பணம் பறிக்க முயற்சி செய்தது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் பாண்டியராஜன். இவரது பெயரில் மர்ம நபர்கள், முகநூல் சமூகவலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி, அவரது நண்பர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர். அதேபோல, பாண்டியராஜன் மனைவி பெயரிலும் பணம் பறிக்க முயற்சித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போலீஸார், ஐபிஎஸ் அதிகாரிகள் பலரது பெயரில், முகநூலில்போலியாக கணக்கு தொடங்கி, பணம் பறிக்க முயற்சி நடந்தது.இந்த கும்பல் குறித்து சைபர்கிரைம் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT