தமிழகம்

ராம்கோ சிமென்ட்ஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஏராளமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலந்தியூர், அரியலூர், செங்கல்பட்டு, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராம்கோ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்டோருக்கான நிவாரணப் பொருட்கள் பேக்கிங் செய்யப் பட்டன. அரிசி, பால், ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பற்பசை, சோப் உள்ளிட்ட பொருட்கள், துணிகள், மெழுகு வர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்டவை அடங்கிய அந்த பைகள் 9 லாரிகளில் ஏற்றப்பட்டு கடந்த 5-ம் தேதியன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டன.

தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்ப்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராமகிருஷ்ணா மடம் மூலம் மருந்துப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 21-ம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் குறிஞ்சிப்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட டி.வி.நல்லூர் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த 70 குடும்பங்கள் தங்கள் வீடுகளை முற்றிலுமாக இழந்தனர். அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பாய், போர்வை, சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்பட்டன.

பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களை அருகில் உள்ள பள்ளியில் தங்கவைத்து உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. விசூர் கிராமத்தில் 165 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் கொடுக்கப்பட்டன. சிதம்பரத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. ஓனான்குப்பம், கல்குணம், ரெட்டிப்பாளையம், எல்லைக்குடி ஆகிய பகுதிகளில் 2500 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT