கோப்புப் படம் 
தமிழகம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி: திருமணம் செய்தவர் மீது வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூர் கரையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (23). பாத்திர வியாபாரியான இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

பின்னர் அவர் தனது மனை வியுடன் புதுச்சேரி வில்லியனூர் மேல்திருக்காஞ்சி பாலமுருகன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

சிறுமி கர்ப்பமான நிலையில், பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

அங்கு அவரது வயதை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது 18 வயது நிரம்பாத சிறுமி என தெரியவந்தது.

உடனே இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசார ணையில் சம்பவம் உறுதியானது.

இதுகுறித்து மங்கலம் காவல் நியைத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தினேஷை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT