சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் பாதைகள் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முழுமையான ரயில் சேவை கிடைக்க இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை காரண மாக எழும்பூர், சென்ட்ரல், கொருக் குப்பேட்டை, குரோம்பேட்டை, தாம் பரம், பெருங்களத்தூர் உட்பட பல்வேறு இடங்களில் ரயில் பாதை கள் மூழ்கியுள்ளன.
சைதாப்பேட்டை கிண்டி ரயில் நிலையம் இடையே ரயில் மேம்பாலம் பாதையில் தண்டாவளம் பழுது ஏற்பட்டுள்ளது. தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகிலும் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் வடிந்தபோதிலும் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் முழுமையாக இயக்கப்படவில்லை.
ஆனாலும், பொதுமக்களின் தேவை கருதி, விரைவு ரயில்கள் இயக்கப்படும் பாதைகளில் எழும்பூர் தாம்பரம் இடையே நேற்று அரை மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டது. வழக்கமாக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மார்க் கத்தில் 240 சர்வீஸ்கள் இயக் கப்படும். நேற்று 40 சர்வீஸ் மட்டுமே இயக்கப்பட்டன.
சென்னை கடற்கரையில் இருந்து அரக் கோணத்துக்கு முக்கால் மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக் கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து கேட்டதற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 3 நாட்களாக மழை அளவு குறைந்ததால், சில இடங் களில் மழைநீர் வடிந்துள்ளது. சைதாப்பேட்டை, ஊரப்பாக்கம் அருகே தண்டவாளம் பழுது பட்டுள்ளதால், சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
பணிகள் முழுமையாக முடியும் வரை, விரைவு ரயில் பாதையில் எழும்பூர் - தாம்பரம் இடையே அரை மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படும். கடற்கரை எழும்பூர் இடையிலும் ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. முழுமையான மின்சார ரயில் சேவை கிடைக்க இன்னும் 2 நாட்கள் ஆகும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
விரைவு ரயில், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள் ளது. இதனால், எழும்பூர் ரயில் நிலைத்துக்கு மட்டும் சுமார் ரூ.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.