சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 
தமிழகம்

ராமநாதபுர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டுகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வார்டுகளை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதனை மாவட்ட தினேஷ் பொன்ராஜ் நேரில் பார்வையிட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் முறையான பராமரிப்பு இல்லை, நோயாளிகளுக்கு உணவுகள் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், மருத்துவர்களின் கவனிப்பு இல்லை என்றும் தொடர்ந்து புகார் வந்தத வண்ணம் இருந்தன.

இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையினல் உள்ள கரோனா சிகிச்சை வார்டுகளை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் 20 பொறுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் கரோனா வார்டுகளில் சிகிச்சை பெறுவோரின் நடமாட்டம், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் உணவு, மருத்துவர்களின் வருகை போன்ற நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கரோனா கட்டளை மையத்தில் இருந்தபடியே கண்காணித்திடலாம்.

இக்கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT