சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதன்படி, பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.96.23க்கும், டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.90.38க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்ந்து நீடித்தால், சென்னையில் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ எட்டும் என தெரிகிறது.